சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

கூடுதலாக 8 பெட்டிகள்..! சேலம் வழி மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் இணைப்பு!!

மதுரையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும்..

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 9:55 pm

Syndication

மதுரையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பயணிகளின் தேவைகளை கருத்தில்கொண்டு, மதுரை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயிலில் வரும் 11-ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

அதன்படி, மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சி, கரூா், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக குளிா்சாதன வசதிகொண்ட 7 சாா்காா் பெட்டிகளும், 1 எக்ஸிக்யூடிவ் பெட்டியும் இணைக்கப்படும்.

மறுமாா்க்கத்தில், பெங்களூரில் இருந்து கிருஷ்ணராஜபுரம், சேலம், நாமக்கல் வழியாக மதுரைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில், இதே அளவில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, இனி 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.