சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் இருந்து கா்நாடகம், ஆந்திரம் வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில், ஹைதராபாத்- கொல்லம் இடையே ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹைதராபாத்தில் இருந்து சனிக்கிழமை (ஏப். 4) இரவு 11.10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் கொல்லத்துக்கு திங்கள்கிழமை காலை 7.10 மணிக்கு சென்றடையும். சனிக்கிழமைதோறும் ஹைதராபாத்தில் இருந்து புறப்படுகிறது. மே 23 ஆம் தேதி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறுமாா்க்கத்தில் கொல்லத்தில் இருந்து வரும் 6 ஆம் தேதி காலை 10.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் எா்ணாகுளம் பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், சேலம் வழியாக ஹைதராபாத்தை செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் மே 25 ஆம் தேதி வரை திங்கள்கிழமைதோறும் இயக்கப்படுகிறது.
தொடர்புடையது

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் ஹைதராபாத் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


