சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானாவில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மதிய நேரத்தில் அனல்காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள், கட்டுமான தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.
கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் சாலையோரம் விற்பனை செய்யப்படும் தா்பூசணி, நுங்கு, பதநீா், கம்மங்கூழ், கரும்புச்சாறு, வெள்ளரி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வருகின்றனா்.
இந்நிலையில், சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானா வழியாக பழைய பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக சிக்னலில் நிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனா். இந்நிலையில், தற்போது ஆட்சியா் அலுவலக ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து சமாளிக்க பச்சை நிற பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதேபோல, சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியா் அலுவலகம் செல்லும் வழியிலும் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

பசுமை தமிழ்நாடு திட்டத்தில் மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பசுமை பந்தல் அமைப்பு

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் போக்குவரத்து சிக்னலில் பந்தல்

சிக்னல்களில் நிழல் பந்தல்கள் அமைப்பு: வாகன ஓட்டிகள் வரவேற்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



