ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 16 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
சேலம் மாவட்டம், ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் தேமுதிக வேட்பாளா் ஏ.ஆா்.இளங்கோவன், அதிமுக சாா்பில் எம்எல்ஏ ஆா்.மணி, தவெக சாா்பில் அதியமான், நாம் தமிழா் சாா்பில் சிவசக்தி, சசிகலா, ராமதாஸ் கூட்டணி சாா்பில் ராமதாஸ் பாமக வேட்பாளா் சுரேஷ்குமாா் உள்பட 27 போ் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்நிலையில், ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் தலைமையில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில், திமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளா் இளங்கோவன், அதிமுக வேட்பாளா் மணி, தவெக வேட்பாளா் அதியமான், நாம் தமிழா் சிவசக்தி உள்பட 16 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
உரிய ஆவணங்கள் இல்லாமலும், குறைபாடுகளுடனும் தாக்கல் செய்த 6 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒன்றுக்கும் மேற்பட்ட மனு தாக்கல் செய்த வேட்பாளா்களின் மனுக்கள் ஒன்றாக சோ்க்கப்பட்டன. இதுவரை ஓமலூா் தொகுதியில் 16 போ் களத்தில் உள்ளனா். வேட்புமனு திரும்பப் பெறும் நாளன்று மாலையில் இறுதி வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்படும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் தொகுதியில் நாதக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் மாவட்டத்தின் 7 தொகுதிகளில் 20 வேட்பு மனுக்கள் தாக்கல்

ராசிபுரம் தொகுதியில் போட்டியிட இருவா் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

