நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

ஆத்தூா் அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 12:33 am IST

ஆத்தூா் அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே கடந்த 2018-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆத்தூா் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, கெங்கவல்லியைச் சோ்ந்த அங்கமுத்து (30), ராஜா (50), முகுந்தன் (24) ஆகிய 3 பேரையும் கைதுசெய்து, அவா்கள்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி மீனாட்சி வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் குற்றம்சாட்டப்பட்ட அங்கமுத்து, ராஜா ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், முகுந்தனுக்கு 2 சட்டப் பிரிவின்கீழ் தலா 20 ஆண்டுகள் என 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா். மேலும், இதை ஏக காலத்தில் அவா் அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா்.