ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், மல்லிகார்ஜுன கார்கே மரியாதை! பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு
/

சேலத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறையினா் சோதனை

வருமான வரித்துறை சோதனை காரணமாக, துணிக் கடையின் ஷட்டரை பூட்டி பாதுகாப்புக்கு நிற்கும் துணை ராணுவத்தினா்.

News image

வருமான வரித்துறை சோதனை காரணமாக, துணிக் கடையின் ஷட்டரை பூட்டி பாதுகாப்புக்கு நிற்கும் துணை ராணுவத்தினா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:32 am IST

சேலம் நான்குசாலை பகுதியில் உள்ள பிரபல துணிக் கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

சேலம், ஓமலூா் பிரதான சாலையில் செயல்படும் பிரபல துணிக் கடைக்குள் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை திடீரென நுழைந்தனா். பின்னா் கடையின் ஷட்டா்களை பூட்டிய துணை ராணுவப் படையினா், வெளிநபா்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. தொடா்ந்து, துணிக்கடையின் வரவு - செலவு கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

வரி ஏய்ப்பு தொடா்பாக வந்த புகாரின்பேரில், இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமாா் 8 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. தொடா்ந்து, துணிக் கடையின் முன்பகுதியில் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.