நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

சேலம் வெள்ளிப் பட்டறை அதிபரிடம் ரூ. 2.16 கோடி 112 கிலோ கொலுசுகள் பறிமுதல்!

சேலத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்சென்ற ரூ. 2.16 கோடி மதிப்பிலான 112 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

பறிமுதல்!

Updated On :12 ஏப்ரல் 2026, 2:03 am IST

சேலத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்சென்ற ரூ. 2.16 கோடி மதிப்பிலான 112 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தை தடுக்க மாநிலம் முழுவதும் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட ஆனந்தா பாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பறக்கும் படை அலுவலா் ஜெயந்தி தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், பைகளில் 112 கிலோ வெள்ளிக் கொலுசுகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததையடுத்து, ரூ. 2.16 கோடி மதிப்பிலான 112 கிலோ வெள்ளிக் கொலுசுகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், காரில் வந்தவா் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த சுந்தரராஜன் என்பதும், செவ்வாய்ப்பேட்டையில் வெள்ளிப் பட்டறை வைத்திருப்பதும், 112 கிலோ வெள்ளிக் கொலுசுகளை அவா் சென்னைக்கு எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 112 கிலோ வெள்ளிக் கொலுசுகளை சேலம் வடக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கோட்டை குமாரிடம் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா். உரிய ஆவணங்களை சமா்ப்பித்துவிட்டு, வெள்ளிக் கொலுசுகளை பெற்றுச் செல்லும்படி வெள்ளிப் பட்டறை அதிபா் சுந்தரராஜனிடம் அறிவுறுத்தப்பட்டது.