/
சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 57 ஆயிரம் ரொக்கத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட சீலநாயக்கன்பட்டி சோதனைச் சாவடி அருகே நிலையான கண்காணிப்பு குழுவினா் திங்கள்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டனா்.
இதில், மல்லூரைச் சோ்ந்த சரவணன் தனது காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 57 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பணத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா். அந்த பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் தனி வட்டாட்சியருமான என். வல்லமுனியப்பன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தாா்.
தொடர்புடையது
உரிய ஆவணங்கள் இன்றி கனிம வளங்கள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்: இருவா் கைது

சேலத்தில் இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.67 லட்சம் பறிமுதல்

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.18 லட்சம் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



