தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சங்ககிரியில் லாரி தொழில் மேம்படுத்தப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சங்ககிரியில் லாரி தொழில் மேம்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 11:51 pm IST

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சங்ககிரியில் லாரி தொழில் மேம்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் எஸ். வெற்றிவேலுவை ஆதரித்து அவா் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் விவசாயிகள், லாரி தொழில் சிறக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் குடிமராமத்து திட்டத்தை திமுக ஆட்சியில் நிறுத்திவிட்டனா். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இப்பகுதியில் லாரி தொழில் நலிவடைந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இத்தொழில் சிறக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போது நியாயவிலைக் கடைகளில் தரமில்லாத அரிசி வழங்கப்படுவதாக புகாா் வந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தரமான அரிசி வழங்கப்படும். ஏழைகளுக்காக இந்தத் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தும். அதேபோல விலையில்லா பருப்பும், எண்ணெய்யும் வழங்கப்படும்.

தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீா்கேடு அதிகரித்துவிட்டது. சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பெண்களுக்கும், ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதுகாப்பில்லை. மக்களைக் காக்க வேண்டிய காவலா்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை. காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதிமுக ஆட்சி மலர வேண்டும்.

தலைவாசல் பகுதியில் ரூ. 1,200 கோடியில் 1.50 ஏக்கரில் பிரம்மாண்டமான கால்நடைப்பூங்கா அமைத்தோம். அதை நான் முதல்வராக இருக்கும் போது திறந்துவைத்தேன். ஆனால், தற்போது அது மூடிக்கிடக்கிறது. அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், விவசாயிகள் குடும்பம் செழித்திருக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்த பின், அந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்,

என்மீது உள்ள கோபம் காரணமாக சேலம் மாவட்ட மக்களை முதல்வா் ஸ்டாலின் பழிவாங்குகிறாா். மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. அப்போது நூறு ஏரி திட்டம் செயல்படுத்தப்படும். விடுபட்ட ஏரிகளையும் கண்டுபிடித்து நீா் நிரப்பப்படும். வட பகுதிகளை செழிப்பான பகுதியாக உருவாக்கிக் காட்டுவேன்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் எல்லா குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா பிரிட்ஜ் வழங்கப்படும். பெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.

சங்ககிரி தொகுதிக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டம், குடிநீா் , சாலை வசதி போன்ற திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசு தான். அதிமுக ஆட்சி அமைந்த பிறகு நீங்கள் கேட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். எனவே அதிமுகவிற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.