மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காவிரி உபரிநீரைக் கொண்டு பனமரத்துப்பட்டி ஏரி நிரப்பப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

காவிரி உபரிநீரைக் கொண்டு பனமரத்துப்பட்டி ஏரி நிரப்பப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image

எடப்பாடி கே.பழனிசாமி

Updated On :17 ஏப்ரல் 2026, 6:24 pm

காவிரி உபரிநீரைக் கொண்டு பனமரத்துப்பட்டி ஏரி நிரப்பப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஸ்ரீ பாலாஜி சுகுமாரை ஆதரித்து ஆட்டையாம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே .பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டின் முதல்வராக ஸ்டாலின் இருக்கலாம். ஆனால் சேலம் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். மேலும், வீரபாண்டி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

இப்பகுதி விசைத்தறி நெசவாளா்களும், விவசாயிகளும் அதிகம் நிறைந்த பகுதியாகும். இவா்களுக்கு அரசுத் தரப்பில் அனைத்து உதவிகளும் பெற்றுத் தரப்படும். அதிமுக ஆட்சியில் அமா்ந்தவுடன் கஞ்சா புழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும்.

விவசாயிகள் நலன்கருதி பனமரத்துப்பட்டி ஏரி காவிரி உபரிநீரால் நிரப்பப்படும் என்றாா்.