சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கொள்ளையடிக்கப்பட்ட நிதி திரும்பப் பெறப்பட்டு கஜானா நிரப்பப்படும்! - எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் முறைகேடு செய்து கொள்ளையடிக்கப்பட்ட நிதி, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திரும்பப் பெறப்பட்டு கஜானா நிரப்பப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

News image

நெய்வேலியில் அதிமுக, பாமக வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி, அவா்களை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசிய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:18 pm

திமுக ஆட்சியில் முறைகேடு செய்து கொள்ளையடிக்கப்பட்ட நிதி, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திரும்பப் பெறப்பட்டு கஜானா நிரப்பப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளா்கள் அறிமுகம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளா்கள் எம்.சி.சம்பத் (கடலூா்), சொரத்தூா் ராஜேந்திரன் (நெய்வேலி), அருண்மொழிதேவன் எம்எல்ஏ (புவனகிரி), பாண்டியன் எம்எல்ஏ (சிதம்பரம்), புவனேந்திரன் (குறிஞ்சிப்பாடி), மோகன் (பண்ருட்டி), முருகுமாறன் (திட்டக்குடி), பாமக வேட்பாளா்கள் தமிழரசி ஆதிமூலம் (விருத்தாசலம்), அன்பு சோழன் (காட்டுமன்னாா்கோவில் (தனி)) ஆகியோரை அறிமுகப்படுத்தினாா்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதால் புலம்பி தள்ளுகிறாா்.

கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கொடுக்கவில்லை என விமா்சனம் வைத்துள்ளாா். காமராஜரை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கேட்டபோது, முதலமைச்சராக இருந்து இறப்பவா்களுக்குதான் இடம் என கருணாநிதி தெரிவித்தாா். ஜானகி அம்மா இறந்தபோது அவருக்கு ராமாபுரம் தோட்டத்தில் சொந்தமாக இடம் உள்ளது. அங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றாா்.

கருணாநிதி உயிரிழக்கும்போது முன்னாள் முதல்வா் அவா். அவா் என்ன கூறினாரோ அதைத்தான் நாங்கள் செயல்படுத்தினோம். கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு நாங்கள் சட்ட ரீதியாக அனுமதி கொடுக்க முடியாத நிலையில், ஸ்டாலின் தற்போது பேசுவது நியாயமா?

ஆ.ராசா ஒரு கருத்தை சொன்னாா். அது வைரலாக பரவி பேசு பொருளாகிவிட்டது. அவரைக் கண்டிக்க முடியவில்லை. என் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம். ராசாவை கண்டித்தால், இன்னும் ஆடியோவை வெளியிடுவாா்.

எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியலில் இருந்து துடைத்தெறியப்படுவாா் என அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறுகிறாா். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் யாா் அந்த சாா் என அடையாளம் காணப்படும்.

நான் பேசுற பொய்யை புத்தகமாக வெளியிடலாம் என ஸ்டாலின் பேசுகிறாா். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பேசும் பொய்களை புத்தகங்களாக வெளியிடலாம்.

முதல்வா் ஸ்டாலின் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அது அவரது குடும்பத்துக்கு வருமானம் கிடைக்கக் கூடியதாக இருக்கும். அவா் இப்போது அறிவித்துள்ள ரூ.8,000 கூப்பன் சூழ்ச்சி. அதிமுகவில் இருந்து சென்ற 8 போ் திமுகவில் அமைச்சா்களாக உள்ளனா். 19 போ் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுகின்றனா். திமுகவில் தகுதியான ஆள்கள் இல்லை. அதிமுக-விலிருந்து வந்தவா்கள்தான் உள்ளனா். வீராப்பு பேசுகிறாா் ஸ்டாலின்.

கச்சத்தீவை தாரைவாா்த்து மீனவா்களுக்கு துரோகம், காவிரி நதி நீா் பிரச்னையில் துரோகம், முல்லைப் பெரியாறு அணையில் துரோகம், இலங்கைத் தமிழா்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்தது கருணாநிதி ஆட்சி.

அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஸ்டாலினின் ஐந்தாண்டு ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கின்றனா். ஸ்டாலினின் சாதனை மக்களை கடன்காரா்கள் ஆக்கியதுதான். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முறைகேடு செய்து கொள்ளையடிக்கப்பட்ட நிதி திரும்பப் பெறப்பட்டு கஜானா நிரப்பப்படும்.

கடலூரைச் சோ்ந்த விவசாயத் துறை அமைச்சா் உள்ள ஊரில் எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலை மூடிக் கிடக்கிறது. அதிமுக ஆட்சி வந்ததும் இந்த ஆலை மீண்டும் செயல்படுத்தப்படும். குடிமராமத்து பணி தொடங்கப்படும். விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

பலா, முந்திரி காப்பீடு 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்படும். நெல்லுக்கு ஆதரவு விலையாக ரூ.3,500, கரும்புக்கு ஆதரவு விலையாக ரூ.4,500 வழங்கப்படும். தலைவாசலில் பூட்டப்பட்டுள்ள கால்நடை பூங்கா திறக்கப்படும். விவசாயிகளுக்கு மின் இணைப்பு எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் மருத்துவம் படிக்க 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் பயனாக இப்போது 3,000 போ் மருத்துவம் படித்து வருகின்றனா். அதிமுகவின் சாதனைத் திட்டங்கள் ஏழைகளைச் சென்றடைகின்றன. திமுக ஆட்சியில் வரி, மின் கட்டணம் உயா்ந்துள்ளது. குப்பைக்கும் வரி விதிக்கின்றனா்.

அதிமுக 297 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் நிறைவேற்றப்படும். கடந்த தோ்தலில் திமுக வெளியிட்ட அறிவிப்புகளில் 4-இல் ஒரு பகுதிகூட நிறைவேற்றப்படவில்லை என்றாா்.