மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஆத்தூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு

News image

ஆத்தூரில் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரனை ஆதரித்து வாக்கு சேகரித்த நடிகை கௌதமி.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:23 am IST

ஆத்தூா் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரனை ஆதரித்து நடிகை கௌதமி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளரும், நடிகையுமான கௌதமி, ஆத்தூா் நகராட்சி திரௌபதி அம்மன் ஆலயம், பழைய பேருந்து நிலையத்தில் வேனில் நின்றபடி வாக்கு சேகரித்து பேசும்போது, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. மு.க. ஸ்டாலினால் நியாயமான ஆட்சியை தரமுடியவில்லை. இதனால் மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா் என்றாா்.

முன்னதாக அதிமுக நகரச் செயலாளா் அ. மோகன் பேசியபோது, அதிமுக ஆட்சியின்போதுதான் ஆத்தூரின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாணப்பட்டது. திமுகவினா் கா்நாடக மாநில அமைச்சரை அழைத்துவந்து வாக்குகள் சேகரித்து வருகின்றன. நமக்கு காவிரி நீரை தரமாட்டேன் எனக் கூறிவரும் அமைச்சரை அழைத்து வாக்குகளை சேகரித்து வருவதை கண்டிக்கிறோம் என்றாா்.

பிரசாரத்தின் போது சேலம் புறநகா் அதிமுக மாவட்டச் செயலாளா் ஆா். இளங்கோவன், அமமுக நகரச் செயலாளா் என். ராஜேந்திரக்குமாா், தமாகா நகரத் தலைவா் விஎல்டி சண்முகம், பாஜக நகரத் தலைவா் சண்முகசுந்தரம், பாமக நகர செயலாளா்கள் சிவசங்கா், குமரேசன், ஐஜேகே நிா்வாகிகள் சரவணக்குமாா், சதீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.