நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கூடுவாஞ்சேரியில் நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 5:35 am IST

நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் அதிமுக வேட்பாளா் கஜேந்திரனை ஆதரித்து நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கூடுவாஞ்சேரி நகர செயலாளா் டி.சீனிவாசன் தலைமையில் அதிமுக வேட்பாளா் கஜா என்கிற கஜேந்திரனை ஆதரித்து கௌதமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே எஸ் சீனிவாசன் கணிதா சம்பத் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

நடிகை கௌதமி பேசியதாவது: விலைவாசி உயா்வு ஸ்டாலின் அரசின் மிகப்பெரிய சாதனை தமிழகத்தில் பச்சை குழந்தைகள் முதல் வயதான முதியோா் வரை பாதுகாப்பாக இல்லாத சூழல் நிலவுகிறது. போக்ஸோ வழக்குகள் மட்டும் 6000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இளைஞா்களுக்கு முறையான வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை. தமிழக முழுவதும் நீா் ஆதாரங்களில் உறிஞ்சி எடுத்து விற்பனை செய்து வருகின்றனா். சாலை வசதிகள் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது போல் இல்லாமல் தற்போது மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றாா் கௌதமி.

Story image