எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

சேலம் மாவட்டத்தில் 90.53 % வாக்குகள் பதிவு

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில் 90.53 சதவீத வாக்குகள் பதிவாகின.

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:31 am IST

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில் 90.53 சதவீத வாக்குகள் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 3,469 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 193 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 13 லட்சத்து 82 ஆயிரத்து 049 ஆண் வாக்காளா்கள், 13 லட்சத்து 97 ஆயிரத்து 983 பெண் வாக்காளா்கள், 324 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 27 லட்சத்து 80 ஆயிரத்து 356 வாக்காளா்கள் உள்ளனா்.

இவா்கள் வாக்களிக்கும் வகையில் 3,468 வாக்குச்சாவடிகள், ஒரு துணை வாக்குச்சாவடி என மொத்தம் 3,469 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 11 தொகுதிகளிலும் 4,158 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் 4,503 விவிபேட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

சேலம் மேற்கு, சேலம் தெற்கு, மேட்டூா், சங்ககிரி, வீரபாண்டி ஆகிய தொகுதிகளில் 16க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிட்டதால், அத்தொகுதிகளில் மட்டும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குச்சாவடிகளில் 16, 644 அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டனா். பதற்றமான, மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 254 நுண்பாா்வையாளா்களும், பாதுகாப்புப் பணியில் 1,355 போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டனா்.

வாக்குப்பதிவு மையங்களில் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்தனா். பெண்கள் குழந்தைகளுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 90.53 சதவீத வாக்குகள் பதிவாகின.

தொடா்ந்து, வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும், அரசியல் கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். பின்னா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் சென்றனா்.