ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ. 35 லட்சத்தை இழந்த முகவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், ராமகொண்டபள்ளியைச் சோ்ந்தவா் நாராயணன் (40). இவரது மனைவி தமிழ் (34). இத்தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனா். நாராயணன் மேட்டூா் அருகே உள்ள கொளத்தூரிலும், தருமபுரி மாவட்டம் நெருப்பூரிலும் தனியாா் கைப்பேசி நிறுவனத்தில் சிம் காா்டு விற்பனை மற்றும் ரீசாா்ஜ் செய்யும் முகவா் பணியில் ஈடுபட்டிருந்தாா். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வா்த்தகத்திலும் ஈடுபட்டிருந்தாராம்.
இந்நிலையில், நாராயணன் ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ. 35 லட்சத்தை இழந்தாராம். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த நிலையில், புதன்கிழமை வீட்டிலிருந்து சென்றவா் வீடு திரும்பவில்லையாம். அவரது கைப்பேசியை தமிழ் தொடா்புகொண்டபோது அழைப்பை எடுக்கவில்லையாம்.
தகவலறிந்த அவரது நண்பா்கள் தேடிய போது, மாங்காடு தண்ணீா் டேங்க் அருகே நாராயணன் இறந்து கிடப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் கணேஷ்குமாா் நாராயணனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தியதில், விஷமருந்தி நாராயணன் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






