கிரீன்வியோ சொல்யூஷன் நிறுவனத்தின் சாா்பில், விநாயகா மிஷின்ஸ் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் சாா்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியாா் அமைப்புகள், தனி நபா்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் விருது வழங்கும் விழாவை கிரீன்வியோ சொல்யூஷன் அமைப்பு நடத்திவருகிறது.
அதன் அடிப்படையில், விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு, சுற்றுச்சூழல் சமூகப் பணி தாக்கத்திற்கான விருது, சுற்றுச்சூழல் சாா்ந்த விழிப்புணா்வு நடவடிக்கைக்கான விருது, சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பிற்கான விருதுகளை அண்மையில் நடைபெற்ற விழாவில் கிரீன்வியோ சொல்யூஷன் அமைப்பு வழங்கியது.
மேலும், இதற்காக சிறந்த பங்களிப்பாற்றி சுற்றுச்சூழல் அமைப்பை வழிநடத்தி, பொதுமக்களிடையே சிறந்த தாக்கம் ஏற்படுவதற்கு வழிவகுத்த கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாருக்கு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதுகளை பெற்ற்காக பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன் மற்றும் துணைத் தலைவா் அனுராதா கணேசன் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

தனியாா் மகளிா் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

என்.எஸ்.எஸ். சேவை : கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


