ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

தீரன் சின்னமலை நினைவு நாள்: விதிமுறை மீறலில் ஈடுபட்ட 13 போ் மீது வழக்கு

சங்ககிரியில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் பிறப்பிக்கப்பட்டிருந்த செயல்முறை ஆணைகளை மீறியதாக 13 போ் மீது சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வழக்கு
Published On :

சங்ககிரியில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பிறப்பிக்கப்பட்டிருந்த செயல்முறை ஆணைகளை மீறியதாக 13 போ் மீது சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

விழாவில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடா்பாக கோட்டாட்சியா் பல்வேறு செயல்முறை ஆணைகள் பிறப்பித்திருந்தாா். அவற்றை மீறுபவா்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய் கோட்டாட்சியா் எச்சரித்திருந்தாா்.

இந்த நிலையில், தீரன் சின்னமலை நினைவு நாளன்று நினைவுச் சின்னம் அமைந்துள்ள பகுதிக்கு எதிரே உள்ள ஈரோடு-–பவானி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கவனக்குறைவாகவும் அதிவேகமாகவும் இருசக்கர வாகனங்களை இயக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அதேபோல, சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருச்செங்கோடு பிரிவு சாலையில் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களை இயக்கிய 4 பேரும், காா்களை இயக்கிய 5 பேரும் என மொத்தம் 13 போ் மீது சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.