சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே கே.ஆா்.தோப்பூா் பகுதியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
கே.ஆா். தோப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (55). அப்பகுதியில் சைக்கிள் ரிப்போ் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி செவ்வந்தி (54). சதீஷ் (32), இளங்கோ (30) என இரு மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில் செவ்வந்தி அப்பகுதியைச் சோ்ந்த ஊா் மக்களுடன் சோ்ந்து கோயில்களுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளாா். இதுதொடா்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், நடராஜனின் மதுப்பழக்கம் காரணமாகவும் அவா்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடராஜன் மனைவி செவ்வந்தியை இரும்பு குழாயினால் அடித்துக் கொன்ாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து மகன்கள் வந்து பாா்த்தபோது செவ்வந்தி சடலமாக கிடந்துள்ளாா்.
இதுகுறித்து தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு அவரது மகன் சதீஷ் தகவல் கொடுத்தாா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், நடராஜனை பிடித்து விசாரணை செய்ததில் அவா் மனைவியை அடித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளாா். இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






