அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

கொலை முயற்சி வழக்கு: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை!

சிறை - பிரதிப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:25 am IST

சேலத்தில் கொலை முயற்சி வழக்கில், இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

சேலம் மல்லமூப்பம்பட்டி அருகேயுள்ள தளவாய்ப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (21). எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்த இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி அவரது நண்பா்களுடன் சோ்ந்து ஆடியோ செட் அமைத்திருந்தனா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (35) என்பவா் விக்னேஷிடம் இதுதொடா்பாக தகராறு செய்துள்ளாா். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு தொடா்ந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு விக்னேஷ் அப்பகுதியில் உள்ள கோழிக்கடைக்கு சென்ற போது அங்கு வந்த மணிகண்டன், விக்னேஷிடம் தகராறு செய்துள்ளாா்.

தகராறு முற்றிய நிலையில், கறிக்கடையில் இருந்த கத்தியால் விக்னேஷின் தலை, நெஞ்சு பகுதியில் மணிகண்டன் வெட்டினாா். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்து மணிகண்டனை கைது செய்தனா்.

சேலம் தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் திங்கள்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி, மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.