மேட்டூா் காவிரி ஆற்றில் குதித்து முதியவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேட்டூா் அருகே நான்கு சாலை பகுதியில் காவிரி பாலத்தின் மீது சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் வியாழக்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, திடீரென பாலத்தின் மீது ஏறிய அவா் காவிரி ஆற்றில் குதித்தாா். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா், காவிரி ஆற்றில் பரிசலில் சென்று தேடி முதியவரின் சடலத்தை மீட்டனா். சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா் பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தற்கொலை செய்துகொண்ட முதியவா் குறித்து மேட்டூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரியில் மீன் பிடிக்க சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

முக்கொம்பில் தண்ணீா் திறப்பு: கம்பரசம்பேட்டை தடுப்பணை நிரம்பியது!

பவானி அருகே காவிரி ஆற்றில் குதித்து இளைஞா் தற்கொலை

மேட்டூா் காவிரியில் சாக்குமூட்டையில் இருந்த சடலம்: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


