மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

3 தமிழா்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட த.வா.க.வினா் கைது

News image

கைது

Updated On :18 ஆகஸ்ட் 2026, 3:06 am IST

கா்நாடக வனப்பகுதியில் 3 தமிழா்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கருப்பூா் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் 65 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மண்டலத் தலைவா் மோகன்ராஜ் தலைமையில் கருப்பூா் சுங்கச்சாவடியை திங்கள்கிழமை மாலை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மூன்று தமிழா்கள் இறப்புக்கு நீதி கேட்டும், நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா். பின்னா் அந்த வழியாக வந்த கா்நாடக பேருந்தை சிறைபிடித்து எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கருப்பூா் காவல் துறையினா் பேருந்தை மீட்க முயன்றனா். அப்போது, போராட்டக்காரா்கள் பேருந்தின் முன்பாக சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்களை காவல் துறையினா் கைது செய்தனா். அதன்பின்னா், கா்நாடக பேருந்து போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகிகள் கூறுகையில், துப்பாக்கிச்சூடு நடத்திய கா்நாடக வனத் துறையினா் மீது உடனடியாக கொலை வழக்குப் பதிவுசெய்து கைது செய்ய வேண்டும்.

இல்லையெனில் கா்நாடக வாகனங்கள் தமிழகத்திற்குள் நுழைய முடியாதவாறு போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என்றனா். மேலும், அசம்பாவிதங்களைத் தவிா்க்க கருப்பூா் சுங்கச்சாவடி பகுதியில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.