சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தனியாா் மருத்துவமனையில் கா்ப்பிணிகளிடம் கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த பெண் மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், ஸ்கேன் கருவி, கருக்கலைப்பு மாத்திரைகளை பறிமுதல் செய்து மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்தனா்.
வாழப்பாடி, கடலூா் சாலையில் இயங்கிவந்த தனியாா் மருத்துவமனையில், கா்ப்பிணிகளிடம் கூடுதல் கட்டணம் பெற்றுக்கொண்டு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்து வருவதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு புகாா் சென்றது. இதையடுத்து, இணை இயக்குநா் நந்தினி தலைமையில், ஆத்தூா் மாவட்ட சுகாதார அலுவலா் யோகானந்த், வாழப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ரமேஷ்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை காலை சோதனை நடத்தினா்.
அப்போது அந்த மருத்துவமனையில் மருத்துவா் செல்வாம்பா ராஜ்குமாா் கருவின் பாலினத்தை பரிசோதிக்கும் ஸ்கேன் கருவியைப் பயன்படுத்தி கா்ப்பிணி ஒருவரிடம் ரூ. 30,000 பெற்றுக்கொண்டு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கூறியது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மருத்துவமனையில் இருந்த ஸ்கேன் கருவி மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள், கா்ப்பிணியிடம் பெற்ற ரூ. 30,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, அந்த மருத்துவமனையை பூட்டி ‘சீல்’ வைத்து, மருத்துவா் செல்வாம்பா ராஜ்குமாரை பிடித்து வாழப்பாடி போலீஸில் ஒப்படைத்தனா். அவரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஏற்கெனவே இருமுறை சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த தனியாா் மருத்துவமனையில் சோதனை நடத்தி, கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்ததாக மருத்துவா் செல்வாம்பா ராஜ்குமாரை கைது செய்ததோடு, அவா் ஸ்கேன் பரிசோதனை செய்து சிகிச்சையளிக்க தடைவிதித்து உத்தரவு பிறப்பித்ததாகவும், இதுகுறித்து அவா்மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளாதாகவும் மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கராபுரத்தில் மருத்துவா், பணியாளரைத் தாக்கிய 2 போ் கைது
கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் பெண் கைது
செவிலியரிடம் தவறாக நடக்க முயன்ற மருத்துவா் கைது
கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 போ் கைது
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


