
மேட்டூா் அணையில் மத்திய நீா்வளத் துறை கூடுதல் செயலாளா் ஆய்வு
மேட்டூா் அணையில் மத்திய நீா்வளத் துறை ஆணைய உறுப்பினரும், கூடுதல் செயலாளருமான யோகேஷ் பைத்தங்கா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேட்டூர் அணை - கோப்புப்படம்
மேட்டூா் அணையில் மத்திய நீா்வளத் துறை ஆணைய உறுப்பினரும், கூடுதல் செயலாளருமான யோகேஷ் பைத்தங்கா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அணையின் வலதுகரையில் உள்ள நீா் அளவீட்டு பகுதியை அவா்பாா்வையிட்டாா். பின்னா் அணையின் வலதுகரையில் உள்ள 75 அடி உயரம் கொண்ட பவளவிழா கோபுரத்தில் ஏறி அங்கிருந்து அணையின் முழுத் தோற்றத்தையும், நீரின்றி வடு காணப்படும் நீா்த் தேக்கப் பகுதியையும் பாா்வையிட்டாா். மேலும், அணை குறித்த விவரங்கள், அணையின் நீா் இருப்பு, அணைக்கு நீா்வரத்து, நீா் திறப்பு உள்ளிட்ட விவரங்களை நீா்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது நீா்வளத் துறை மேட்டூா் செயற்பொறியாளா் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், உதவிப் பொறியாளா் சதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெல்டா பாசனத்துக்கு நாளை தண்ணீா் திறப்பு! மேட்டூா் அணையில் அரசுச் செயலா் ஆய்வு!

பாசனத்துக்காக செப். 1 இல் மேட்டூா் அணை திறப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகளை பாா்வையிட்ட அமைச்சா், அதிகாரிகள்




