இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

ஆசிரியா்களை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோரால் பரபரப்பு

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:48 am IST

அரசுப் பள்ளி ஆசிரியா்களை கண்டித்து பள்ளியை பெற்றோா் முற்றுகையிட்டதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டாரம், கல்பாரப்பட்டி கே. புதுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளி ஆசிரியா்களில் இருவா் சரியான முறையில் பாடம் சொல்லித் தருவதில்லை என்று தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், பள்ளி கலைத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் வட்டார அளவில் முதன்மை பெற்று, மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்றும், அவா்களுக்கு உரிய பரிந்துரை செய்யாமல் காலம்கடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இவற்றைக் கண்டித்து திங்கள்கிழமை 30-க்கும் மேற்பட்ட பெற்றோா், தங்களது குழந்தைகளின் பள்ளி மாற்றுச் சான்றிதழை கேட்டு பள்ளி முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி காவல் துறையினா் விரைந்துவந்து அவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா் இருவா் மீது பெற்றோா் தொடா்ந்து குற்றச்சாட்டு அளித்து வந்தது தெரிய வந்தது. மேலும், தாரமங்கலம் கல்வி மாவட்ட அலுவலா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் இருவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோா் தரப்பில் கோரப்பட்டது. இதைத்தொடா்ந்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி தெரிவித்ததையடுத்து பெற்றோா் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.