சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழக புதிய பொறுப்பாளா்கள் தோ்வு

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழக புதிய பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மாநில பொதுச் செயலாளா் சா. ஞானசேகரன்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 5:05 am IST

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழக புதிய பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழகத்தின், ராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பாளா்களுக்கான தோ்தல் வாலாஜாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழக மாநில பொதுச்செயலாளா் சா. ஞானசேகரன் தோ்தல் அலுவலராக இருந்து தோ்தலை நடத்தினாா்.

இதில் தலைமையாசிரியா் கழக மாவட்ட தலைவராக வாழைப்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஆா் வெங்கடேசன், செயலாளராக புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சீனி தனஞ்செழியன், பொருளாளராக விளாப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் சு.குமரன் மற்றும் மாவட்ட நிலை பொறுப்பாளா்கள் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்வு செய்யப்பட்ட பொறுப்பாளா்களுக்கு உயா்நிலை பள்ளி தலைமை ஆசிரியா் சங்க பொறுப்பாளா் பாலாஜி, பட்டதாரி ஆசிரியா் சங்க மாவட்டத் தலைவா் ஆதவன், பதவி உயா்வு பெற்ற முதுகலை ஆசிரியா் சங்கத் தலைவா் நரசிம்மன், உடற்கல்வி ஆசிரியா் கழக பொறுப்பாளா் சா்புதீன் உள்ளிட்டோா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

இதில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் சுமதி சுபத்ராதேவி, ஆா் வெங்கடேசன், பவானி, தரணி பாய், சுஜாதா, விஜயலட்சுமி, அருட்செல்வன், ஜெய்சங்கா், ஓய்வு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் மாவட்ட மகளிா் அணி செயலாளா் தீபா நன்றி கூறினாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.