தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

சேலம் வழியாக பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில் இயக்கம்

ரயில் - கோப்புப் படம்

Published On :

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரத்துக்கு ஓணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஓணம் பண்டிகையையொட்டி அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, எஸ்எம்விடி பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அந்தவகையில், பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து வரும் 28 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா், திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், கொல்லம் வழியாக மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையம் அடையும்.

மறுமாா்க்கத்தில், திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் வரும் 29 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கொல்லம், கோட்டயம், எா்ணாகுளம், திருச்சூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் காலை 5.15 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.