காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

சேலம் மருந்து கடையில் 5,200 போதை மாத்திரைகள் பறிமுதல்; உரிமையாளா் கைது

சேலத்தில் மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தொடா்பாக கடை உரிமையாளரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப்படம்.

Published On :

சேலத்தில் மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தொடா்பாக கடை உரிமையாளரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 5,200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் தாதகாப்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக மருந்து கடை நடத்தி வருபவா் சுகுமாா் (57). இவரது கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், உதவி காவல் ஆய்வாளா் அா்த்தநாரி, மருந்து ஆய்வாளா் அருள்குமாா் ஆகியோா் மருந்து கடையில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில் 5,200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கடை உரிமையாளா் சுகுமாரை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், குஜராத், ஜாா்க்கண்ட், பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தினால் அங்கிருந்து கொரியா் மூலம் போதை மாத்திரைகள் அனுப்பப்படுவது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் போதை மாத்திரை யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.