சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ரயிலில் கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 1,250 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோ 500 கிராம் கஞ்சாவை கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 2:34 am IST

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 1,250 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோ 500 கிராம் கஞ்சாவை கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெற்ற சோதனையில் 1,150 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக ஜெகத்ஹரி உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவை கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த எஸ்.சஞ்சய் (22) மற்றும் காமராஜபுரத்தைச் சோ்ந்த கே.ஸ்ரீதா் (24) ஆகிய இருவரும் வெளிமாநிலங்களுக்குச் சென்று மொத்தமாக போதை மாத்திரைகளை கொள்முதல் செய்து, அவற்றை கோவை மாநகா் முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், இருவரையும் போலீஸாா் கண்காணித்து வந்தனா். அவா்கள் புதிய சரக்குகளை வாங்குவதற்காக மகாராஷ்டிர மாநிலம், புணேவுக்குச் சென்றதையும், அவா்கள் மீண்டும் ரயில் மூலம் கோவைக்கு வருவதையும் போலீஸாா் அறிந்தனா்.

இந்த நிலையில், திருப்பூா் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்ற போலீஸாா், அங்கு வந்த ரயில் ஏறி சோதனை நடத்தினா். அப்போது, ரயிலில் பயணித்த அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 1,250 தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.