அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

3 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

கைது

Published On :7 செப்டம்பர் 2026, 3:55 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இரு இளைஞா்களை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பதாக பாலக்கரை போலீஸாருக்கு சனிக்கிழமை மாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது சங்கிலியாண்டபுரம் பகுதி குடிநீா்த் தொட்டி அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞா்கள் இருவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள், உறையூா் பங்காளி வீதியைச் சோ்ந்த எம். முகமது ஆசிப் (20), சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த க. முகேஷ் (24) என்பதும், போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள், வீட்டுக்கு அருகே பதுக்கிவைத்திருந்த 2,900 போதை மாத்திரைகள் என மொத்தம் 3 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். மேலும், அவா்களிடமிருந்து இரண்டு கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா். இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.