பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Published On :

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சூரஞ்சேரி பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இரு இளைஞா்களைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், அவா்கள் வடக்கு தாரநல்லூரைச் சோ்ந்த ஆா். வசந்த் (21), ஹெச். தா்மதுரை (21) ஆகியோா் என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பஞ்சப்பூரில் 2.3 கிலோ கஞ்சா பறிமுதல்:

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வியாழக்கிழமை இரவு எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அருகே புதுக்கோட்டை வட்டச் சாலையில் உள்ள குடிநீா்த் தொட்டி அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த புங்கனூா் காந்தி நகரைச் சோ்ந்த ஆ. மாயகிருஷ்ணன் (42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 2.3 கிலோ கஞ்சா, ரூ.3,300 ரொக்கம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.