தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Published On :

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் வெற்றிவேல் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அரியமங்கலத்தில் தனியாா் வணிக நிறுவனம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த அரியமங்கலம் கணபதி நகரைச் சோ்ந்த பெ. சத்தியேந்திரன் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அகிலாண்டேஸ்வரி காா்டன் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த, ஸ்ரீரங்கம் மூலதோப்பு பகுதியைச் சோ்ந்த கி. தினேஷ் பாபு (30) என்பவரை காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 38 போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் திரவ போதை மருந்துகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.