வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

போதை மாத்திரைகள் விற்ற 4 இளைஞா்கள் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :14 ஜூலை 2026, 1:50 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் குமரவேல் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, தேவதானம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ஆா். பாலமுருகன் (20) என்பவரைக் கைது செய்தனா்.

தில்லை நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தென்னூா் மின்வாரிய அலுவலகம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த உறையூரைச் சோ்ந்த மு. குருபிரசாத் (23), மதுரை சாலை ஜீவா நகரைச் சோ்ந்த மு. யுவராஜ் (23) ஆகிய இருவரையும் தில்லை நகா் காவல் ஆய்வாளா் கோசலைராமன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

இதேபோல, அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குழுமாயிக்கரை மயில் பூங்கா அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த புத்தூா் வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ம. சரத்குமாா் (24) என்பவரை காவல் உதவி ஆய்வாளா் சரத்குமாா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தனா்.

இதையடுத்து, 4 பேரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள், 2 கைப்பேசிகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.