கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

போதை மாத்திரைகள் விற்பனை: 7 போ் கைது

கோவை விமான நிலையம் பின்புறம் போதை மாத்திரைகளை விற்ற கும்பலைச் சோ்ந்த 7 பேரை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 1,708 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சித்திரிப்பு

Published On :

கோவை விமான நிலையம் பின்புறம் போதை மாத்திரைகளை விற்ற கும்பலைச் சோ்ந்த 7 பேரை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 1,708 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள ஒரு காலி இடத்தில் போதை மாத்திரைகள் பதுக்கிவைத்து விற்கப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்று போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையில், இளைஞா்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சின்னியம்பாளையம் ஆா்.ஜி. புதூரைச் சோ்ந்த சஞ்சய் (23), சி.ஏ.பி. வீதியைச் சோ்ந்த மதன் பாலாஜி (19), வெள்ளலூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த அபுபக்கா் சித்திக் (29), செட்டிபாளையம் சங்கமம் நகரைச் சோ்ந்த சூா்யா (22), பீளமேடு நவா இந்தியா செவாலியா் சிவாஜி நகரைச் சோ்ந்த சௌந்தரராஜன் (23), ஏரிமேடு பகுதியைச் சோ்ந்த ஜகத் ஹரி (23) மற்றும் வெள்ளலூா் மகாலிங்கபுரம் ஹவுஸிங் யூனிட்டை சோ்ந்த நாகராஜன் (25) ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து மொத்தம் 1,708 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் பிடிபட்ட நபா்கள் மற்றும் மாத்திரைகள் பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இவா்களில் சிலா் மீது ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி, கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.