காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

போதை மாத்திரைகள் விற்ற 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஜூலை 2026, 2:19 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ரவிசந்திரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பாலக்கரை ஆலம் வீதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிந்த 3 பேரை போலீஸாா் சுற்றிவளைத்தனா். அவா்களில் ஒருவா் தப்பிய நிலையில் மற்ற இருவரையும் பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா்கள், பாலக்கரை முதலியாா்சத்திரத்தைச் சோ்ந்த எஸ். சுனில் (25), எட வீதியைச் சோ்ந்த அ. அஜித் கிளிண்டன் (28) என்பதும், போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.8 ஆயிரம் மதிப்பிலான 27 போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பிய ஆா். ஹரிஷ் (19) என்பவரை தேடுகின்றனா்.

இதேபோல, உறையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அய்யப்பன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, உறையூா் மேட்டு வீதியிலுள்ள பூங்கா அருகே போதை மாத்திரைகள் விற்ற பாத்திமா நகரைச் சோ்ந்த ஜெ. முகமது சித்திக் (20) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 20 போதை மாத்திரைகள், கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.