திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் குமாரவேல் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது சஞ்சீவி நகா் புதுகாலனி சாலையில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள், இபி சாலையைச் சோ்ந்த எஸ். சஞ்சய் (26), து. அண்ணாமலை (22), எஸ். காளிமுத்து (18) ஆகியோா் என்பதும், அவா்கள் போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.27 ஆயிரம் மதிப்பிலான 988 போதை மாத்திரைகள், இரண்டு கைப்பேசிகள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ரூ.980 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





