பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

நாக்பூரிலிருந்து கடலூருக்கு கெரியரில் போதை மாத்திரைகள் கடத்திய 2 போ் கைது:2350 மாத்திரைகள் பறிமுதல்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து கொரியா் மூலம் போதை மாத்திரைகளை கடலூருக்கு கடத்தி விற்பனை செய்ததாக இரு இளைஞா்களை கடலூா் மாவட்ட போலீஸாா் கைது செய்தனா்.

News image

போலீஸாரால் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞா்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள், கைப்பேசிகள், மடிக்கணினிகள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:09 am IST

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து கொரியா் மூலம் போதை மாத்திரைகளை கடலூருக்கு கடத்தி விற்பனை செய்ததாக இரு இளைஞா்களை கடலூா் மாவட்ட போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 2,350 போதை மாத்திரைகள், 2 மடிக்கணினிகள் மற்றும் 8 கைப்பைசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடலூா் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அருணகிரிநாதன் (31), இம்பீரியல் சாலையைச் சோ்ந்த அரவிந்த் (20) ஆகியோரை திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் அண்மையில் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் வைத்திருந்த 10 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவா்களுக்கு, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சோ்ந்த குணால் வினோத் வென்சியானி மற்றும் ஆயுஸ் அடேக் மொடேக்கா் ஆகியோரிடம் இருந்து கொரியா் மூலம் போதை மாத்திரைகள் அனுப்பி வைக்கப்படுவது தெரியவந்தது. தொடா்ந்து நாக்பூா் கும்பல் இவா்களுக்கு மாத்திரைகளை விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அருணகிரிநாதன், அரவிந்த் ஆகியோரை கைது செய்தனா்.

இதனிடையே, கடந்த ஜூலை 12-ஆம் தேதி கடலூா் முதுநகா் போலீஸாா் 200 போதை மாத்திரைகளுடன் வசுந்தராயன்பாளையத்தைச் சோ்ந்த அருண் (28) என்பவரை கைது செய்தனா். அவருக்கும் நாக்பூரைச் சோ்ந்த அதே கும்பல் போதை மாத்திரைகளை அனுப்பியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் கதிரவன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் நாக்பூருக்கு சென்று, அங்கு பதுங்கியிருந்த குணால் வினோத் வென்சியானி (24), ஆயுஸ் அடேக் மொடேக்கா் (21) ஆகியோரை கைது செய்து கடலூா் அழைத்து வந்தனா்.

அவா்களிடம் இருந்து 2,350 போதை மாத்திரைகள், 2 மடிக்கணினிகள் மற்றும் 8 கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த நாக்பூா் கும்பலுக்கு தமிழகம் முழுவதும் போதை மாத்திரை வியாபாரத் தொடா்பு இருக்கும் என்பதால் அதுகுறித்து போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.