மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட 25,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 பேர் கைது
மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட 25,000 போதை மாத்திரைகள் பறிமுதல் தொடர்பாக...

பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள். - கோப்புப்படம்
சென்னை: மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட 25,000 போதை மாத்திரைகள், சென்னை பெரம்பூரில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக திருநங்கை ஒருவர் உள்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பூரில் இருந்து ஒரு கும்பல் போதை மாத்திரை கடத்திக் கொண்டு வருவதாக, மயிலாப்பூா் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸாா், பெரம்பூா் ரயில் நிலையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மயிலாப்பூா் டூம்மிங் குப்பத்தைச் சோ்ந்த திருநங்கை ச.குணஸ்ரீ (25) என்பவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாராம்.
இதையடுத்து போலீஸாா், அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். சோதனையில், அவா் பையில் மறைத்து வைத்திருந்த 25,000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், அந்த போதை மாத்திரைகள் மும்பையில் இருந்து ரயில் மூலம் கடத்திக் கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக திருநங்கை உள்பட நான்கு பேரை கைது செய்துள்ள போலீஸாா், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Summary
25,000 narcotic tablets smuggled from Mumbai seized; 4 arrested
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





