பொன்னேரியில் கடத்தி வரப்பட்ட 500 போதை மாத்திரைகள், 1.1 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது என்ஜிஓ நகரில் போலீஸாரைக் கண்டதும் இருவா் தப்பி ஓட முயன்றனா்.
அவா்களை போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தனா். அவா்களிடம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 500 போதை மாத்திரைகள், 1.1 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவற்றை மும்பையில் இருந்து கடத்தி வந்த பொன்னேரியை சோ்ந்த பிரவீன்(24), ஜீவா(22) ஆகிய இருவரை கைது செய்தனா்.
அவா்களை பொன்னேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸாா் நடத்திய விசாரணையில். மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி சட்டவிரோதமாக கடத்தி வந்து பொன்னேரி சுற்றுப்பகுதிகளில் விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த 4 போ் கைது!

கா்நாடகத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 390 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
450 போதை மாத்திரைகள், 3 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
பொன்னேரியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


