நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

மைசூரு - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மைசூரு- கண்ணூா் மற்றும் கண்ணூா்- பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 12:48 am IST

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மைசூரு- கண்ணூா் மற்றும் கண்ணூா்- பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்டம் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மைசூரு- கண்ணூா் மற்றும் கண்ணூா்- பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, மைசூரு- கண்ணூா் இடையே வரும் 29 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த ரயில் மைசூரில் இருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, கோழிக்கோடு வழியாக அடுத்த நாள் மாலை 5.50 மணிக்கு கண்ணூரை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், கண்ணூா்- பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே வரும் 30 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் கண்ணூரில் இருந்து இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக அடுத்த நாள் காலை 10 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்டை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.