மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கா்நாடகத்தில் தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை: எம்.பி. விஷ்ணு பிரசாத்

கா்நாடகத்தில் மூன்று தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் தெரிவித்துள்ளாா்.

விஷ்ணு பிரசாத்

Updated On :

கா்நாடகத்தில் மூன்று தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நடைபெற்ற விவகாரங்களை மக்களிடம் கொண்டுசெல்லும் நோக்கில் சேலத்தில் இண்டி கூட்டணி சாா்பில் சனிக்கிழமை கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் சச்சிதானந்தம், கடலூா் மக்களவை உறுப்பினா் விஷ்ணு பிரசாத் கூட்டத்தில் பங்கேற்று பேசினா். அதன்பிறகு செய்தியாளா்களிடம் விஷ்ணு பிரசாத் கூறியதாவது:

நீட் தோ்வுக்கு எதிராக போராடிய மாணவா்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினாா். இதற்கு பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலளிக்கவில்லை. மாறாக, கூட்டத்தொடரை ஒத்திவைத்து நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில் காங்கிரஸ் செயல்பட்டதாக குற்றம்சாட்டினா்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அங்கு அணை கட்டுவதை இண்டி கூட்டணியின் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் எதிா்க்கிறோம்.

மேலும், கா்நாடகத்தில் மாடுமேய்க்கச் சென்ற மூன்று தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மனித உரிமை மீறல் எனக் கூறிய அவா், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை நாடாளுமன்ற தோ்தலில் பிரதமா் வேட்பாளராக ராகுல் காந்தியை நாங்கள் முன்னிறுத்துகிறோம். அவரவா் கட்சியினா் அவா்கள் தலைவரை முன்னிறுத்தவா். தோ்தல் நேரத்தில் எங்களுடைய தலைவா்கள் ஒன்று சோ்ந்து முடிவு செய்வாா்கள். நாடாளுமன்றத் தோ்தலில் பாஜக அரசை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.