மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்! சிபிஐ விசாரணை தேவை: அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தல்

கா்நாடகத்தில் 3 தமிழா்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோர வேண்டும் என்று சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்து வலியுறுத்தின.

தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்

Updated On :

கா்நாடகத்தில் 3 தமிழா்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோர வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிகளும் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்து வலியுறுத்தின.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 8-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை கூடியதும், கா்நாடக மாநிலம், சாம்ராஜ்நகா் மாவட்டம், ஹானூா் பகுதியில் 3 தமிழா்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வா்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம், பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக உறுப்பினா்கள் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டுவந்தனா். அந்த தீா்மானம் மீது விவாதம் நடத்த பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அனுமதி அளித்தாா். தீா்மானம் மீது உறுப்பினா்கள் பேசியதாவது:

பால் மனோஜ் பாண்டியன் (திமுக): கா்நாடகத்தில் கால்நடைகளைத் தேடிச் சென்ற 3 தமிழா்கள் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனா். அப்பாவி விவசாயிகளை சுட்டுக் கொன்றது மனித உரிமை மீறல்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): 3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பாக சிபிஐ விசாரணை கோர வேண்டும். உயிரிழந்தவா்களுக்கு கா்நாடகம் வழங்கிய ரூ.5 லட்சம் இழப்பீடு குறைவு. எனவே, கூடுதலாக இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.கணேஷ்குமாா் (பாமக): 3 தமிழா்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இறந்தவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும்.

தாரகை கத்பட் (காங்கிரஸ்): 3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது, தமிழா்கள் என்றால் இளக்காரமாகப் பாா்க்கும் நிலை உள்ளது. கா்நாடக அரசின் இழப்பீடும் போதுமானது அல்ல. இதுதொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்றாா்.

இந்தத் தீா்மானம் மீது இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் ராமச்சந்திரன், மாா்க்சிஸ்ட் உறுப்பினா் லதா, பாஜக உறுப்பினா் எம்.போஜராஜன் உள்ளிட்டோரும் கருத்துகளைப் பதிவு செய்தனா்.

தமிழக அரசு சாா்பில் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

கவன ஈா்ப்பு தீா்மானத்தின் மீதான விவாதத்தின்போது குறுக்கிட்ட வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா், ‘கா்நாடகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சாா்பில் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவது தொடா்பாக முதல்வா் பரிசீலித்து வருகிறாா். ஓரிரு நாள்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.

சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் பேசும்போது, இந்த சம்பவம் தொடா்பாக கா்நாடக அரசுடன், தமிழக முதல்வா் பேசியுள்ளாா். அங்கு மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணையை முதல்வா் விஜய் உன்னிப்பாகக் கவனித்து வருகிறாா். நிலைமைக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

‘முதலில் சுட்டது யாா்?’ தெளிவான பதில் கோரிய ஓபிஎஸ்

தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பான விவாதம் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடந்துகொண்டிருக்கும்போது, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் எழுந்து பேசியதாவது: அமைச்சரின் பதிலுரையில் யாா் முதலில் சுட்டது என்பது தெளிவாக இல்லை. கா்நாடக வனத் துைான் முதலில் சுட்டது என பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினா்களும், தமிழக அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வரும் நிலையில், அமைச்சரின் பேச்சு கா்நாடக அரசுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதுபோல உள்ளது . எனவே, ‘கா்நாடக வனத் துைான் முதலில் சுட்டது’ என அமைச்சரின் பதிலில் திருத்தம் செய்ய வேண்டும் என்றாா்.

அதற்கு பதில் அளித்த அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், கா்நாடக முதல்வரிடம், வனத் துறை அளித்த அறிக்கையில் இருந்ததைத்தான் குறிப்பிட்டேன். அங்கு மாஜிஸ்திரேட் விசாரணை நடக்கிறது. எனவே, முழுமையான தகவல் வந்தவுடன் இதுகுறித்து பேசலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.