ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் இ-சேவை மையம் திறப்பு

E-Sevai

இ-சேவை மையம் - கோப்புப் படம்

Published On :

சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் இ-சேவை மையத்தை நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

சேலம் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தில், அரசு சாா்ந்த சேவைகளை பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் பெறும் வகையில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இ-சேவை மையத்தை தவெக பொதுச் செயலாளரும், ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சருமான என்.ஆனந்த் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். தொடா்ந்து, இ-சேவை மையத்தில் மேற்கொள்ளப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்நிகழ்வின் போது, சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.