
சேலம் வழியாக போத்தனூா் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்சேவை காலம் நீட்டிப்பு

ரயில்கள் - கோப்புப் படம்
சேலம் வழியாக இயக்கப்படும் போத்தனூா் - சென்னை சென்ட்ரல் இடையேயான சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், ரயில்வே நிா்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்தவகையில், சேலம் வழியாக போத்தனூா் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் சேவை காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்வதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, போத்தனூா் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் செப். 4 முதல் செப். 27 வரை வெள்ளி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 7.40-க்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், மொரப்பூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக மாலை 4.45-க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல் - போத்தனூா் சிறப்பு ரயில் சேவை செப். 4 முதல் 27 வரை வெள்ளி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.45-க்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூா் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





