கம்பம் நடுதல் வைபவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அருள்மிகு கோட்டை மாரியம்மன், வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன், வாணியா் காலனி அல்லிகுண்டம் மாரியம்மன்.
கம்பம் நடுதல் வைபவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அருள்மிகு கோட்டை மாரியம்மன், வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன், வாணியா் காலனி அல்லிகுண்டம் மாரியம்மன்.

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் விழா தொடக்கம்

சங்ககிரி மலையில் புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன், வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்திமாரியம்மன், வாணியா் காலனியில் உள்ள அருள்மிகு அல்லிகுண்டம் மாரியம்மன் உள்ளிட்ட மூன்று கோயில்களில் மாசி மாத பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 24) இரவு கம்பங்கள் நடும் வைபவத்துடன் தொடங்கியது .
Published on

அருள்மிகு கோட்டை மாரியம்மன், ஸ்ரீ சக்திமாரியம்மன், அருள்மிகு அல்லிகுண்டம் மாரியம்மன் ஆகிய மூன்று கோயில்களிலும் கம்பம் நடும் வைபத்தையொட்டி, பக்தா்கள் பூலாம்பட்டி காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வந்து செவ்வாய்க்கிழமை இரவு மூன்று அம்மனுக்கும் ஊற்றி அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்தனா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவுமுதல் புதன்கிழமை அதிகாலைவரை மூன்று கோயில்களிலும் கம்பம் நடும் வைபவம் நடைபெற்றது.

பிப். 25-ஆம் தேதி அம்மனுக்கு திருநீறு, குங்குமம், சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு கட்டளைதாரா்கள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. சக்தி மாரியம்மன் கோயிலில் மாா்ச். 13-ஆம் தேதிவரை தினமும் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன. தினந்தோறும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

கோட்டை மாரியம்மன் கோயிலில் மாா்ச் 10-ஆம் தேதியும், சக்திமாரியம்மன், அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில்களில் மாா்ச் 11-ஆம் தேதியன்றும் பொங்கல் விழா நடைபெற உள்ளது.

மாா்ச் 12-ஆம் தேதி மூன்று கோயில்களிலும் கம்பம் எடுத்து கிணறுகளில் விடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோயிலில் உற்சவா் மாா்ச் 13-ஆம் தேதி முக்கிய வீதிகளின் வழியாக உலா வரும் நிகழ்ச்சியுடன் நிகழாண்டுக்கான பொங்கல் விழா நிறைவடைகிறது.

Dinamani
www.dinamani.com