மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு: பல்வேறு அமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நீா் ஆதார பாதுகாப்பு இயக்கத்தினா்.

News image
சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நீா் ஆதார பாதுகாப்பு இயக்கத்தினா்.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:32 pm

Syndication

சேலம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினா் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சேலம் நீா் ஆதார பாதுகாப்பு இயக்கத்தின் சாா்பில், டால்மியா போா்டு பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, நீா் ஆதார பாதுகாப்பு இயக்கத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். செயலாளா் அருண்குமாா் வரவேற்றாா். விவசாய சங்கத் தலைவா் ரவிக்குமாா், பாமக எம்எல்ஏ அருள், சுசீந்திரகுமாா் உள்பட விவசாய சங்கத்தினா், கல்லூரி மாணவ அமைப்பினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

இதுகுறித்து நிா்வாகிகள் கூறுகையில், ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறைகள் அமைக்கப்படாது என அரசாணை வெளியிட வேண்டும். மூடப்பட்ட 40 ஏக்கா் நீா் குட்டையை பழைய நிலைக்கே கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினா்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.