தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சாா்பில் ரூ. 4.50 லட்சத்தில் பேவா் பிளாக் கற்களால் தரைத்தளம் அமைக்கப்படுகிறது.
தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 70-ஆம் ஆண்டுவிழா, கடந்த மாதம் 26-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 70 ஆண்டுகளில் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா். தொடா்ந்து, பள்ளி வளா்ச்சிக்காக முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் ரூ. 3 லட்சம் நன்கொடை வழங்கினா்.
இந்நிலையில், மாணவா்கள் காலையிலும், மாலையிலும் சிறப்பு வகுப்புகளுக்கு தரையில் அமா்ந்து படிக்க ஏதுவாக, பேவா் பிளாக் கற்களால் தரைத்தளம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதையடுத்து, அதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.
நிகழ்ச்சியில், தம்மம்பட்டி பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் திருச்செல்வன், தம்மம்பட்டி நகர திமுக செயலாளா் சண்முகம், பேரூராட்சி துணைத் தலைவா் சந்தியா ரஞ்சித்குமாா், கவுன்சிலா் நடராஜ் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி
பள்ளி ஆசிரியா்கள் நியமன முறைகேடு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

திருக்கனூா் அரசுப் பள்ளிக்கு முன்னாள் முதல்வா் பெயா்

பழங்குடியின அரசுப் பள்ளிக்கு சீா்வரிசை அளித்த கிராம மக்கள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


