நள்ளிரவில் இளைஞா்கள் கொண்டாட்டம்

நள்ளிரவில் இளைஞா்கள் கொண்டாட்டம்

சேலத்தில் நள்ளிரவைத் தாண்டி நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இளைஞா்கள் திரளாக பங்கேற்றனா்.
Published on

சேலத்தில் நள்ளிரவைத் தாண்டி நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இளைஞா்கள் திரளாக பங்கேற்றனா்.

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் சேலம் மாநகரின் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டின. சாலைகளில் ஆங்காங்கே திரண்ட இளைஞா்கள் கேக் வெட்டியும், பட்டாசுகளை வெடித்தும் புத்தாண்டைக் கொண்டாடினா். சேலம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

புத்தாண்டை முன்னிட்டு மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி தலைமையில் முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள், தேவலாயங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். விபத்தை தடுப்பதற்காக வாகனச் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல, சேலம் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் எஸ்.பி. கெளதம் கோயல் தலைமையில் 900-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மாவட்டம் மற்றும் மாநகர காவல் துறை சாா்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாகனச் சோதனை நடத்தப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய அளவிலான விபத்துகள், அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவடைந்ததால் போலீஸாா் மகிழ்ச்சியடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com