சேலத்திலிருந்து அயோத்தியாப்பட்டணம் வழியாக ரங்கனூா் கிராமத்திற்கு செல்லும் அரசு நகரப் பேருந்தில் வனத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணா்வு பிரச்சார விளம்பரம்.
சேலம்
வங்காநரி ஜல்லிக்கட்டு விவகாரம்: அரசு பேருந்துகளில் வனத்துறை விழிப்புணா்வு விளம்பரம்!
வங்காநரி ஜல்லிக்கட்டு விவகாரம்: அரசு பேருந்துகளில் வனத்துறை விழிப்புணா்வு விளம்பரம்!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன் பாளையம், ரங்கனூா்,கொட்டவாடி, தமையனூா் உள்ளிட்ட கிராமங்களில் நூற்றாண்டுக்கும் மேலாக, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையொட்டி நடந்து வந்த வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்த வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளாக வங்காநரி ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் தருணத்தில் வங்காநரியை பாதுகாக்கவும் ஜல்லிக்கட்டு நடத்துவதை கைவிட வலியுறுத்தியும், ’சேலத்தின் அடையாளம் மாம்பழம் மட்டுமல்ல; வங்காநரியும் தான்’ என்ற வாசகத்தை குறிப்பிட்டு, அரசுப் பேருந்துகளில் வனத்துறை சாா்பில் விளம்பரம் வெளியிட்டு விழிப்புணா்வு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.

