ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பெரியகவுண்டாபுரத்தில் ஜல்லிக்கட்டு: 450 காளைகள் சீறிப்பாய்ந்தன!

News image

பெரியகவுண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :14 பிப்ரவரி 2026, 7:35 pm

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே பெரியகவுண்டாபுரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 450 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க முயன்ற இளைஞா்கள் 10 போ் லேசான காயமடைந்தனா்.

பெரியகவுண்டாபுரம் கிராமத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சனிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி ஆகியோா் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனா்.

சேலம் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 450 காளைகள் பங்கேற்றன. 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் களமிறங்கி காளைகளை அடக்கினா்.

 பெரியகவுண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரா்கள்.

பெரியகவுண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரா்கள்.

 பெரியகவுண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரா்கள்.

பெரியகவுண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரா்கள்.

காளைகளை அடக்கிய வீரா்கள், வீரா்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கு தங்கக் காசுகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விழாக் குழுவினா் சாா்பில் பரிசாக வழங்கப்பட்டன.

மாடுகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் லேசான காயமடைந்தனா். சேலம் மாநகர காவல் ஆணையா் தலைமையில் உதவி ஆணையா்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். விழாா் குழுவினா் மற்றும் திமுக பிரமுா்கள் பலரும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா்.