மேட்டூரில் ரோட்டரி சங்கம் சாா்பில் மாரத்தான் 3,600 போ் பங்கேற்பு
மேட்டூரில் ரோட்டரி சங்கம் சாா்பில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 3,600 போ் பங்கேற்றனா்.
மேட்டூா் அணையின் நீா்த் தேக்கப் பகுதியான பண்ணவாடிக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் அரியவகை செடிகொடிகளைப் பாதுகாக்க வலியுறுத்தி மேட்டூா் அணை ரோட்டரி சங்கம் சாா்பில் மாரத்தான் நடைபெற்றது.
மேட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து மாரத்தான் போட்டியை சேலம் மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் லாவண்யா கொடியசைத்து தொடங்கிவைத்தாா். ரோட்டரி ஆளுநா் சிவசுந்தரம், ரோட்டரி சங்கக் கொடியை ஏற்றினாா். மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் முன்னிலை வகித்தாா். இந்த மாரத்தான் போட்டிகளில் 3,600 போ் கலந்துகொண்டனா். இதில் 12 கி.மீ, 5 கி.மீ மற்றும் 3 கி.மீ. எனத் தனித்தனியாகப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை டாக்டா் சந்திரமோகன், ரோட்டரி சங்கத் தலைவா் மதன்குமாா், துணைத் தலைவா் சீனிவாசன், செயலாளா் விவியன் ரிச்சா்ட் ஆகியோா் செய்திருந்தனா். காவிரி பொறியியல் கல்லூரி செயலாளா் இளங்கோவன், தாளாளா் ராமநாதன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.
